என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளி மாணவி மாயம்"
- சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஜஸ்டன் திரவியம் மகள் பபிதா (வயது16). இவர் பெரியகுளத்தில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற பபிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
- வீட்டைவிட்டு வெளியே சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே தாடிக்சேரியை சேர்ந்த ரவிக்குமார் மகள் மோகனஸ்ரீ (வயது15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வரு கின்றனர்.
- தேர்வு எழுத சென்ற மாணவி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் :
பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகள் ஹரினி (வயது 17). இவர் வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று காலாண்டுத்தேர்வு எழுத பள்ளிக்கு செல்வதாக கூறிச் சென்றார்.
ஆனால் அவர் அங்கு வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அதிர்ச்சியடைந்த பரமசிவம் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி ப்பார்த்தும் கிடைக்காததால் தென்கரை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊருக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிறுமி வீட்டில் இல்லை
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் 17வயது சிறுமி.
இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் கடந்த 3-ந் தேதி பெங்களூருக்கு சென்றிருந்தனர்.
பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிறுமி வீட்டில் இல்லை. இதனால் பதறிப்போன அவர்கள் பல இடங்களில் சிறுமியை தேடினர். எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் தாயார் மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினரான முரளி என்பவர் சிறுமியை பெண் கேட்டு வந்தார்.
அவர் சிறுமி என்பதால் பெண் தரமறுத்து விட்டோம். எனவே, முரளி சிறுமியை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மொரப்பூரை அடுத்த புதூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (40). இவரது மனைவி கிருத்திகா (21). இவர்களுக்கு 1½ வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ஜே.சி.பி. டிரைவர் தேசிங்கு என்பவருடன் கிருத்திகாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் கணவன்-மனைவி இருவரும் தூங்கி கொண்டி–ருந்தனர். மறுநாள் காலை விடிந்ததும் தன்னுடன் தூங்கி கொண்டிருந்த கிருத்திகாவை காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தாமரைச்செல்வன் மொரப்பூர் போலீஸ் நிலையத்தில் ஜே.சி.பி. டிரைவர் முரளி தனது மனைவி கிருத்திகாவை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்கேத்தின் பேரில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் இருந்த பிளஸ்-2 மாணவி திடீரென மாயமானார்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகில் உள்ள தென்கரை முத்துராஜா தெருவை சேர்ந்த கார்த்திக் மகள் பிரியா(17).
பிளஸ்-2 படித்து வருகிறார். காலாண்டு தேர்வுக்காக வீட்டில் படித்து கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தென்கரை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17 வயது பிளஸ்-2 மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில் திடீரென மாயமானார்.
- மாணவி மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே 17 வயது பிளஸ்-2 மாணவி தனியார் பள்ளியில் படித்து வந்தார். நேற்று காலை பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா ஆகியோர் வழக்குபதிவு செய்து மாணவி மாயமானாரா அல்லது கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேவதானப்பட்டி அருகே பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை
- பள்ளி மாணவி மாயம், போலிசார் விசாரணை.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் ராஜகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகள் பிரியா (வயது 19). பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.
சம்பவத்தன்று பெரியகுளத்தில் உள்ள பள்ளிக்கு சென்று மாற்றுச் சான்றிதழ் வாங்கி வருவதாக கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் வீருசின்னு ஜெய மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே சின்னமனூர் எரசக்கநாயக்கனூர் வடக்கு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகள் ஹரிணிபிரியா (வயது 17). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற ஹரிணி பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்துள்ளனர். இரவில் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஹரிணி பிரியா தன்னை தேட வேண்டாம் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பூவரசு என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஹரிணி பிரியாவை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் குள்ளப்புரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ரவி மகள் அபிதா (வயது 17). சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். தாய் கண் விழித்த போது அபிதா மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஜெய மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கோட்டார் பட்டியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்